×

பங்குனி உத்திர திருவிழாவையொட்டி தென்மாவட்ட மக்கள் குலதெய்வ கோவில்களில் வழிபாடு

நெல்லை: இன்று பங்குனி உத்திர திருவிழா கொண்டாடப்படுவதையொட்டி பொதுமக்கள் தங்களது குலதெய்வம் மற்றும் முருகன் கோவில்களில் வழிபாடு செய்து வருகின்றனர். சாஸ்தா அவதரித்த பங்குனி உத்திர திருவிழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து தென்மாவட்ட மக்கள் தங்களின் குலதெய்வமான சாஸ்தா கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தினார்கள். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தாலும் பங்குனி உத்திர நாளில் தென்மாவட்டங்களுக்கு வந்து வழிபடுவதை மக்கள் வழக்கமாகும்.

இதற்காக தென் மாவட்டங்களில் உள்ள சாஸ்தா கோவில்களில் அதிகாலை 5 மணியில் இருந்து நள்ளிரவு 12 மணி வரை சாஸ்தாவுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். நள்ளிரவு 12 மணிக்கு பிறகு கருப்பசாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பொங்கலிட்டு கிடா வெட்டி அசைவ படைப்பு போட்டு வழிபாடு நடத்த உள்ளனர்.

குரும்பூர் மேல புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில், தேரிகுடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவில், சேரன்மாதேவி அருகே உள்ள பிராஞ்சேரி கரையடி மாடசாமி கோவில் மற்றும் வீரியப்பெருமாள் சாஸ்தா கோவில், அம்பை அருகே உள்ள மெய்யப்ப சாஸ்தா கோவில், கோபாலசமுத்திரம் பசுங்கிளி சாஸ்தா கோவில், படப்பகுறிச்சி குளத்துப்புழை தர்ம சாஸ்தா கோவில், மானூர் கீழப்பிள்ளையார் குளம் திருமேனி அய்யனார் சாஸ்தா கோவில் உள்ளிட்ட பல ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. பங்குனி உத்திர திருவிழாவையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நெல்லை புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து சாஸ்தா கோவில்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்ட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : temples ,festival ,mawatha , Marai Uthiram Festival, Sastha, worship
× RELATED ஊத்துக்கோட்டை அருகே சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு